திருமணமான 25 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 25 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-29 19:04 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 29). கால் டாக்சி டிரைவர். இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.

இந்த நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன், தன்னுடைய அக்காள் வீட்டுக்கு விருந்துக்காக மனைவியுடன் சென்று வந்தார். அப்போதும் அவர் குடிபோதையில் தான் இருந்து உள்ளதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் விஜயனின் அக்காள், "ஏன் அதிகமாய் குடிக்கிறாய்?. தற்போது திருமணமாகி விட்டது. இனிமேலாவது குடி பழக்கத்தை விடு" என்று தம்பியை கண்டித்தார். இதில் விரக்தி அடைந்த விஜயன், தனது வீட்டுக்கு வந்ததும் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுமாப்பிள்ளை விஜயனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்