திருமணமான 3 நாளில் பரிதாபம்: தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-02 18:10 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் ராஜாராம் (வயது 26). இவருக்கும், செட்டித்திருகோணம் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் வசந்திக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று இவரது குடும்பத்தினர் கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர். அப்போது ராஜாராம் பக்கத்து கிராமமான அரனூரில் பருத்தி வயலில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்