திருமங்கலத்தில் பரிதாபம்-:தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்மூடப்பட்ட ரெயில்வே கேட்; ஆம்புலன்ஸ் வர தாமதத்தால் கல்லூரி மாணவி சாவு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தும் காப்பாற்ற முடியாமல் போனது

திருமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ஆம்புலன்ஸ் வர முடியாமல் போனது. மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றும் மாணவியை காப்பாற்ற இயலவில்லை

Update: 2023-07-11 20:47 GMT

திருமங்கலம்,

திருமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ஆம்புலன்ஸ் வர முடியாமல் போனது. மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றும் மாணவியை காப்பாற்ற இயலவில்லை.

தற்கொலைக்கு முயற்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விருசங்குளத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் பிரபாவதி (வயது 18). கப்பலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் நேற்று காலை திடீரென தூக்குப்போட்டு பிரபாவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரபாவதியை மீட்டனர்.

உடனே அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அழைத்தனர். திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட ஆம்புலன்சு, வரும் வழியில் ெரயில்வே கேட் மூடப்பட்டதால் நின்றது.

வாகனங்கள் காத்திருந்தன

சென்னை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரக்கூடிய ரெயில்கள் அடுத்தடுத்து காலை நேரத்தில் அந்த வழியாக செல்லும். இதனால் காலையில் தொடர்ச்சியாக அதிக நேரம் கேட் மூடப்பட்டு இருக்கும் நிலை ஏற்படுவது உண்டு.

நேற்றும் அதுபோன்று கேட் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சும் மற்ற வாகனங்களுடன் காத்திருந்தன. இதே போல் கேட்டின் மறுபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே நீண்டநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரிதவித்தனர். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அங்கு ஆம்புலன்ஸ் நிற்பதை அறிந்து இருசக்கர வாகனத்தில் நடுவே பிரபாவதியை அமரவைத்து, அவசரம் அவசரமாக திருமங்கலம் ரெயில்வே கேட் பகுதிக்கு ெகாண்டு வந்தனர்.

மாணவி இறப்பு

இருசக்கர வாகனம் முன்னேறி செல்ல முடியாதபடி ரெயில்வே கேட் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நின்றதை அறிந்தனர். அந்த பகுதியில் நின்றவர்கள் உதவி செய்ய முன்வந்தாலும், ஆம்புலன்சில் மாணவியை ஏற்ற முடியாத நிலை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழியாக மதுரை-செங்கோட்டை ரெயில் கடந்து சென்றதும் ெரயில்வே கேட் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர், பிரபாவதியை தூக்கிச்சென்று அவசர அவசரமாக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

வேதனையான சம்பவம்

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் கூறுகையில், நாங்கள் இருசக்கர வாகனத்தில் மாணவியை ஏற்றி ெரயில்வே கேட் வரும் வரையில் உயிர் இருந்தது. ெரயில்வே கேட்டில் மாட்டிக்கொண்டு அதன்பின்பு ஆஸ்பத்திரிக்கு வந்த போது, பிரபாவதி உயிரிழந்து விட்டார் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேம்பாலம் தேவை

திருமங்கலம் விமான நிலையம் ரோட்டில் உள்ள இந்த ெரயில்வே கேட்டினை கடந்துதான் காமராஜர்புரம், கற்பகம்நகர், சோனைமீனா நகர், விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர். தினமும் 75 முறைக்கு மேல் திறந்து மூடப்படும் இந்த ெரயில்வே கேட்டினை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கவேண்டும் என திருமங்கலம் பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மேம்பாலம் கட்டவில்லை. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விபத்தில் சிக்கினாலோ அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ெரயில்வே கேட்டினை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

ெரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் நோயாளிகளை உடனடியாக மருத்துவ சிகிக்சைக்கு அழைத்து ெசல்ல முடியாமல் போவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம்தான் நேற்றும் அரங்கேறி உள்ளது. இந்த ரெயில்ேவ கேட் பகுதியில் விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்