காட்டுத்தீயை வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்; சுவர் விழுந்து பலியானார்

காட்டுத்தீயை வேடிக்கை பார்த்த பெண் சுவர் இடிந்து விழுந்து பலியானார்.

Update: 2023-03-13 20:27 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு அழகை நகர் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மனைவி காளீஸ்வரி (வயது 42). இவரது வீட்டின் அருகில் உள்ள சஞ்சீவி மலையில் நேற்றுமுன்தினம் தீப்பிடித்தது. இதை வீட்டு மாடியில் உள்ள சுவர் மீது சாய்ந்து கொண்டு காளீஸ்வரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சுவர் திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் காளீஸ்வரியும் கீழே விழுந்து காயம் அடைந்தாா். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்