டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பரிதாபம்: பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-22 18:30 GMT

நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி மோகனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 53). இவர் நேற்று முன்தினம் கோவைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு செல்வதற்காக கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் ராதாகிருஷ்ணன் படியில் நின்று கொண்டு வந்தார். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புகழூர் வள்ளுவர் நகர் மேம்பால சர்வீஸ் ரோட்டில் சென்றபோது டிரைவர் ராஜா திடீரென பிரேக் போட்டதால் ராதாகிருஷ்ணன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக பயணிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து பஸ்சை அதிவேகமாக ஓட்டி சென்ற டிரைவர் ராஜா, கண்டக்டர் கலையரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்