மதுரை ரெயில் நிலையத்தில் பரிதாபம்: சென்னை மாணவி மயங்கி விழுந்து சாவு

மதுரை ரெயில் நிலையத்தில் பரிதாபம்: சென்னை மாணவி மயங்கி விழுந்து சாவு.

Update: 2023-05-22 20:49 GMT

மதுரை,

சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் அபிநந்தனா (வயது 15). இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையான அபிநந்தனா விருதுநகரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை அணியினருடன் சென்றார்.

அங்கு விளையாடிவிட்டு, அணியினருடன் மதுரையில் இருந்து ரெயிலில் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் நேற்று காலை மாட்டுத்தாவணி சென்றார். அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி ரெயில் நிலையம் முன்பு இறங்கினார். பின்னர் மாணவி அபிநந்தனா, ரெயில்நிலையம் முன்பு நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மாணவி அபிநந்தனாவை பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அபிநந்தனாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்த போது இந்த துயர சம்பவம் நடந்ததாகவும் உடன்வந்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்