பாலம் கட்டும் பணிக்காக இரவில் போக்குவரத்து நிறுத்தம்

ஏலகிரி மலையில் பாலம் கட்டும் பணிக்காக இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 17:29 GMT

ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் 3 இடங்களில் சாலையை துண்டிப்பு செய்து சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களது பயணத்தை மாற்றிக்கொள்ளுமாறு திருப்பத்தூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்