சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியே போக்குவரத்து கட்டுப்பாடு - உத்தரவை மாற்றியமைக்க ஐகோர்ட் மறுப்பு

நமது தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுகிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.

Update: 2022-09-08 05:06 GMT

சென்னை,

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக கோவை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமானால் 400 கி.மீ. தூரத்திற்கு பயணிக்க வேண்டும் என்றும், இந்த சாலை வழியாக சென்றால் 130 கி.மீ. மட்டுமே பயணித்தால் போதுமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், நமது தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுகிறோம் என்று வேதனை தெரிவித்தனர். மேலும் கோர்ட் உத்தரவுக்கு முன்பே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த உத்தரவை மாற்றியமைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்