தடாகம் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை நாட்களில் முத்தண்ணன் குளக்கரை பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தடாகம் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2023-07-31 19:30 GMT



விடுமுறை நாட்களில் முத்தண்ணன் குளக்கரை பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தடாகம் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


குளக்கரையில் கூட்டம்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முத்தண்ணன் குளக்கரை அழகுபடுத் தபபட்டு உள்ளது. அங்கு அலங்கார விளக்கு உள்ளிட்ட விளை யாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் விடுமுறை தினங்களில் குளக்கரைக்கு வந்து பொழுது போக்க வருபவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


முத்தண்ணன் குளக்கரையில் தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த நேரங்களில் பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.


தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்


விடுமுறை நாட்களில் முத்தண்ணன் குளக்கரை பூங்காவுக்கு அதிக எண்ணிக்கையில் வரும் பொதுமக்கள் தங்களின் வாக னங்கள் குளத்தின் முன் தடாகம் ரோட்டில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்ற னர். இதனால் பூங்காவுக்கு முதலில் வந்து வாகனத்தை நிறுத்தி யவர்கள் மீண்டும் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.


மேலும் வாகனத்தை வேகமாக வெளியே இழுக்கும் போது அருகில் நிறுத்தப்படும் வாகனங்கள் சேதம் அடைகிறது. சிலர் மற்றவர்க ளின் வாகனங்களை இழுத்து நடுரோட்டில் விட்டு செல்லும் அவலமும் நேர்கிறது.


போக்குவரத்து நெரிசல்


இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.


இது குறித்து போக்குவரத்து போலீஸ துணை கமிஷனர் மதிவாணன் கூறும்போது, முத்தண்ணன் குளக்கரை அருகே தடாகம் ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வாகனங்களை முறையாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் செய்திகள்