கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.