சாலையோரம் குவிக்கப்படும் மணல்களால் போக்குவரத்துக்கு இடையூறு

கூடலூர்-ஊட்டி இடையே சாலையோரம் குவிக்கப் படும் மணல்களால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-01 21:15 GMT


கூடலூர்


கூடலூர்-ஊட்டி இடையே சாலையோரம் குவிக்கப் படும் மணல்களால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகின்றனர்.


தேசிய நெடுஞ்சாலை


கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூர் வழியாக ஊட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. சீசன் சமயத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.


இதனால் ஏற்படும் நெருக்கடி காரணமாக கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகலாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது கோடை சீசன் முடிவடைந்த நிலையில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கணிசமாக வருகை தருகின்றனர். இந்தநிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மேல் கூடலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மண் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது.


போக்குவரத்துக்கு இடையூறு


இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும், கூடலூர், பந்தலூர் தாலுகா மற்றும் வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சாலையில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.


இதனால் பொதுமக்கள் சாலை நடுவே நடந்து செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் ஊட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணிக்காக கட்டுமான பொருட்களும் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வைத்துள்ள மண் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்