சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

அரியலூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-08-17 18:39 GMT

அரியலூர் நகரில் நூற்றுக்கணக்கான கறவை மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து விடுவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. அனைத்து மாடுகளுமே காதுகளில் டோக்கன் பதிக்கப்பட்ட வங்கிகளின் மூலம் கடன் வாங்கிய மாடுகளாகும். மாடுகளின் உரிமையாளர்கள் காலையிலும், மாலையிலும் பால் கறக்கும் நேரத்தில் மட்டும் அவைகளை பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் சாலையில் அவிழ்த்து விடுகின்றனர்.

அரியலூர் காய்கறி மார்க்கெட், வணிக நிறுவன பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஒரு சில மாடுகள் சாலையில் செல்பவர்களை முட்ட வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பள்ளி மாணவியை மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மார்க்கெட் தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அடைத்து அதற்கு அபராதம் விதிப்பார்கள். இதேபோல் நகராட்சி நிர்வாகத்தினர் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்