சாலையின் குறுக்கே நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2023-07-31 19:45 GMT

கொடைக்கானலில் இருந்து காட்ரோடு நோக்கி மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே கொண்டை ஊசி வளைவில் வந்தபோது லாரியை டிரைவர் திருப்ப முயன்றார். ஆனால் லாரியை திருப்ப முடியவில்லை. இதனால் லாரியை முன்னும் பின்னுமாக டிரைவர் நகர்த்தினார். இதனால் அந்த சாலையில் வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை சாலையோரம் நிறுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானதால் வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்