போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2022-08-25 15:13 GMT

போடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், பறக்கும் படை அலுவலர் முத்துகுமார் மற்றும் அதிகாரிகள் போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 50 மூட்டைகளில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஜீப்பை ஓட்டி வந்தவர் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்த வனத்துரை (வயது 37) என்பதும், போடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உத்தமபாளையம் பொது வினியோக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்