சாலையில் ஓடிய மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

வத்தலக்குண்டு அருகே சாலையில் ஓடிய மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-01 15:24 GMT

வத்தலக்குண்டு அருகே விருவீடு-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 300 மாடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர். அப்ேபாது மாடுகள் அங்கும் இங்கும் மிரண்டு ஓடின. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிடை மாடுகளை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை வழியாக ஓட்டி செல்லாமல் காட்டுப் பகுதி வழியாக ஓட்டி செல்ல வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்