மண் குவியலால் போக்குவரத்து பாதிப்பு

மண் குவியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2023-01-18 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே அண்ணா நகர், பேக்டரிமட்டம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பந்தலூரில் இருந்து அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தநிலையில் அண்ணா நகர் சாலையோரத்தில் உள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்டு, சாலையையொட்டி கொட்டப்பட்டு உள்ளது. இந்த மண் குவியலால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடிவது இல்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டு உள்ள மண் குவியலை அகற்றவும், சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்