சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு;
வால்பாறை
வால்பாறை பகுதியில் அவ்வப்போது பகலிலும், இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் வால்பாறை-காஞ்சமலை சாலையில் நேற்று நள்ளிரவு முதல் நேற்று காலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.