சாலை வளைவில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சாலை வளைவில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-10 19:59 GMT

ராதாபுரம்:

கூடங்குளம் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான காற்றாலை நிறுவனத்திற்கு நாமக்கல்லில் இருந்து காற்றாலை உதிரி பாகங்கள் ஏற்றிய கனரக லாரி ராதாபுரம் பகுதிக்கு வந்தது. அந்த கனரக லாரியால் ஒரு வளைவில் திரும்ப முடியாமல் சிக்கியது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதன் காரணமாக அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கனரக கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 

Tags:    

மேலும் செய்திகள்