போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

Update: 2022-12-28 19:14 GMT

கீழக்கரை

கீழக்கரை நகராட்சியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரையை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நகராட்சி, தாலுகா, வங்கி, கல்லூரி, பள்ளி போன்ற பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை சாலை வரை செல்லும் சீதக்காதி சாலை இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளதாலும், வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பஸ்கள் மூலம் கீழக்கரை நகருக்குள் வந்து செல்வதாலும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சாலையில் இருபுறமும் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் அவசர தேவைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் ஊருக்குள் வரக்கூடிய ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பஸ்கள் ஆகிய வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்