தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை

தூத்துக்குடி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-03-27 18:45 GMT

தூத்துக்குடி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். மாநகரின் முக்கிய சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுவது, ரெயில்வே தண்டவாள பணிகள் போன்றவற்றால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக திண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.

ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் ச.தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூத்துக்குடியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்