கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் - இன்று அமலுக்கு வருகிறது

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-04-01 04:35 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்புக்கும், தாசபிரகாஷ் சந்திப்புக்கும் இடையே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால் இன்று(சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை (3-ந்தேதி) அதிகாலை 5 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். கோயம்பேட்டில் இருந்து ஈ.வெ.ரா. சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி போக முடியாது. தாசபிரகாஷ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அழகப்பா சாலை சந்திப்பில் மீண்டும் வலதுபுறம் திரும்பி ஈ.வெ.ரா. சாலையை சென்றடையலாம். இதேபோல ஈ.வெ.ரா. சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் எவ்வித மாற்றமின்றி நேராக செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்