பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நெல்லையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அறிவியல் மையத்திற்கு கல்வி சுற்றுலா வந்திருந்தனர். அவர்களுக்கு அறிவியல் தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டது.
பின்னர் கொக்கிரகுளத்தில் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் ஏட்டுகள் பாலமுருகன், செந்தில்பாண்டி மற்றும் போலீசார் பள்ளி குழந்தைகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது வாகனத்தில் வேகமாக செல்லக்கூடாது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் போன்ற ஆலோசனைகளை குழந்தைகளிடம் போலீசார் தெரிவித்தனர்.