மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தா.பழூரில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-20 19:15 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின் பகுதியில் உள்ள அனுமார் கோவில் தெருவில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றின் காரணமாக முறிந்து மின்கம்பி மீது சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மரம் சாய்ந்த போது பொதுமக்கள் அந்த வழியாக செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மரக்கிளைகளை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்