புளியரை 'எஸ்' வளைவில் லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

புளியரை ‘எஸ்’ வளைவில் லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-05 18:45 GMT

செங்கோட்டை:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரை 'எஸ்' வளைவுக்கு மேல் பகுதியில் நேற்று காலையில் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதனால் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கேரள எல்லையான கோட்டைவாசலில் இருந்து புளியரை, செங்கோட்டை வரையிலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான லாரியை போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்