ஓடையில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
அருமனை அருகே ஓடையில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருமனை:
அருமனை அருகே ஓடையில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குலசேகரத்தில் இருந்து தார் கலவையுடன் லாரி ஒன்று புறப்பட்டு அருமனை-குலசேகரம் இணைப்பு சாலையில் பிலாக்காடு என்ற இடத்தில் நேற்று மாலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் டிரைவர் திருப்பிய போது எதிர்பாராத விதமாக லாரி சக்கரம் சாலையோரத்தில் இருந்த கழிவு நீர் ஓடையில் சிக்கியது. இதனால் அருகில் இருந்த வீட்டு சுவருடன் சேர்ந்த சிலாப் பகுதியில் நெருங்கி நின்றதால் வீட்டு சுவரில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டது.
சாலையில் லாரி நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு வேறு வாகனத்தை வரவழைத்து லாரியை மீட்டு சென்றனர்.