செட்டியாபத்தில்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

செட்டியாபத்தில்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-22 18:45 GMT

உடன்குடி:

உடன்குடியிலிருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் சாலையில் செட்டியாபத்து அருகே சாலையின் குறுக்கே பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததன. அப்போது வாகனங்களோ, பொதுமக்களோ அந்த பகுதியில் செல்லாததால் விபரீதம் ஏதும் நிகழவில்லை. உடனடியாக அந்த சலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் முறிந்து விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மரம் வெட்டும் கருவிகளை கொண்டு மரத்தினை வெட்டி அகற்றினர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்