மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்-ஊட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சி முனை பகுதி உள்ளது. இங்கு வனத்துறைக்கு சொந்தமான யூகலிப்டஸ் பண்ணை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காலை 9.30 மணிக்கு மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.