ஓடை பாலத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டியில் ஓடை பாலத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-02-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓடை பாலத்தில் சரிந்து நின்றது. இதைக் கண்ட கூலித் தொழிலாளர்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் லாரியை லாவகமாக தள்ளி மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்