சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2022-11-19 18:59 GMT

திருப்பூரில் சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருப்பூரில் சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருப்பூரில் சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் குமரன் சிலை அருகே உள்ள சாலையில் தற்போது கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த சாலையின் வளைவு பகுதியில் பஸ் நிறுத்தம் இருக்கிறது. ஆனால் அந்த வழியாக செல்லும் பஸ்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல், நடுரோட்டில் டிரைவர்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதன்காரணமாக பின்னால் செல்லும் வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் அந்த சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே முறையற்று நிறுத்தப்படும் பஸ்களை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயத்தில் இந்த கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணியையும் விரைந்து முடித்து கொடுத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன் அடைவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்