விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடந்தது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். வட்டார அட்மா குழு தலைவர்கள் விருத்தாசலம் குமார், பாவாடை கோவிந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். வேளாண்மை துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி, பூங்கோதை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் பிரேமலதா, மாவட்ட விற்பனை குழு செயலாளர் விஜயா, வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகிராமன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், கடலூர் கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சிலம்பரசன், அட்மா திட்ட மேலாளர் உமா மகேஸ்வரி, வேளாண் அறிவியல் நிலைய நுண்னுயிரியல் உதவி பேராசியர் காயத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் செயல்படும் இயற்கை விவசாய குழுக்கள், பாரம்பரிய ரகங்கள், அரசின் புதிய திட்டங்கள், மண்வளம், மண் பரிசோதனை, பாரம்பரிய ரகங்கள் மதிப்பு கூட்டுதல், நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் முறைகள், கால்நடையில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், வேளாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். அதனை தொடர்ந்து இயற்கை விவசாயிகள் பாரம்பரிய ரகங்கள், சாகுபடி, விவசாயிகளின் தேவைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் நன்றி கூறினார். முன்னதாக பாரம்பரிய வேளாண் கண்காட்சியை சிறப்பாக செய்த விவசாயிகளுக்கு பாிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்