பாரம்பரிய விளையாட்டு விழா

கடையம் அருகே மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு விழா நடந்தது.;

Update: 2023-05-09 21:28 GMT

கடையம்:

கடையம் அருகே தோரணமலை பக்தர் குழு சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு விழா நடந்தது. செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் வகையில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில், பாரம்பரிய தற்காப்பு கலை சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பராசக்தி கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியை கயற்கன்னி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை பால்தாய் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்