பாரம்பரிய உணவு திருவிழா
டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். மாணவர் வசந்த் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் அகமதுசுல்தான், பேராசிரியர் செந்தில்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாணவ-மாணவிகள் பாரம்பரிய உணவு தயார் செய்து காட்சிக்காக வைத்திருந்தனர். இதில் உதவி பேராசிரியர்கள் சங்கீதா, வெங்கடேசன், அங்கமுத்து, மாரியாப்பிள்ளை, ராமர், சக்திவேல், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை முதலாமாண்டு மாணவி லட்சுமி பாலா நன்றி கூறினார்.