குதிரை, மாட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நடந்த குதிரை சந்தை, மாட்டு சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் குவிந்தனர்.

Update: 2022-12-06 13:35 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நடந்த குதிரை சந்தை, மாட்டு சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் குவிந்தனர்.

குதிரை சந்தை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிருவிழாவில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவைெயாட்டி நடைபெறும் தேரோட்டத்தின்போது பாரம்பரியமாக குதிரை சந்தை, மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான குதிரை, மாட்டு சந்தை கடந்த 3-ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடலில் நடந்த இந்த சந்தையில் குறைந்த அளவிலான மாடுகளே கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று சந்தையில் விற்பனை களை கட்டியது. குதிரை சந்தைக்காக திருவண்ணாமலை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குதிரைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் பல ரக குதிரைகள் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது.

வாங்கி சென்றனர்

அதேபோல் மாட்டு சந்தையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் அங்கு குவிந்து மாடு, குதிரைகளை வாங்கிச் சென்றனர்.

சந்தைக்கு அருகிலேேய மாடு மற்றும் குதிரைக்கு கட்டுவதற்கு தேவையான மணி, கயிறு விற்பனை செய்வதற்காக ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மருத்துவ முகாம்

மேலும் கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கால்நடைத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த சந்தையை நேரில் சென்று பார்வையிட்டனர். இதனால் குதிரை சந்தை நடைபெற்ற பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்