வியாபாரிகள் சங்க கூட்டம்

மன்னார்புரத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-06-21 19:50 GMT

இட்டமொழி:

மன்னார்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க 9-வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் புனித ஆரோக்கிய அன்னை வளாகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் செல்லத்துரை நாடார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நெல்லை மாடசாமி, செயலாளர் ஜாஸ்மின் கிறிஸ்டியன், பொருளாளர் அதிர்ஷ்டபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மணிமாறன் வரவேற்று பேசினார்.

நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுடலைமணி நன்றி கூறினார்.

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வருகிற 2-ந்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்ட விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு போலீசார் தகுந்த பாதுகாப்பும், மாநகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் வழியாக பஸ்கள் இயக்க அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் சங்க தலைவர் முருகேசன் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் தர்மராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்