வியாபாரிகள் சங்க கூட்டம்

நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.;

Update: 2023-05-11 21:02 GMT

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், நெல்லை டவுனில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. தலைவர் முகமது யூசூப் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் நாராயணன், கான்முகமது, முகமது அனிபா, சம்சுதீன், செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பாளையங்கோட்டை பஸ் நிலைய வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் உள்ளதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நெல்லையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க வேண்டும். குறிப்பாக குற்றாலம் ரோடு, தென்காசி செல்லும் சாலையில் பழையபேட்டையில் இருந்து தொண்டர்சன்னதி வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலைகளை சீர்செய்து புதிய சாலை அமைக்க வேண்டும். டவுன் போஸ் மார்க்கெட் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடித்து வணிகர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஜவஹர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், ராமசந்திரன், கண்ணன், அப்துல்ரகுமான்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்