வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்
சுரண்டையில் வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் நடந்தது.;
சுரண்டை:
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சுரண்டை கிளை கூட்டம் சங்க தலைவர் எஸ்.கே.ராமசாமி தலைமையில் நடந்தது. கிளை நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன், ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.டி.பாலன் அனைவரையும் வரவேற்றார். மாநில வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், மாநில அமைப்பு தலைவர் எஸ்.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெறும் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு சென்னை வி.ஜி.பி. தங்க கடற்கரையில் வைத்து நடைபெறும் சுதேசி விழிப்புணர்வு மாநாட்டில் அனைத்து வியாபாரிகளும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும், கிளை சங்க பேரவைக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில், வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.எஸ்.சேர்மன் செல்வம், ராஜா, ஏ.கே.எல்.குமாரசாமி, மருதச்சாமி பாண்டியன், சாந்தி பாலா, நகராட்சி கவுன்சிலர் வசந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.