வியாபாரிகள் சங்க கூட்டம்

ஆறுமுகநேரியில் அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-11 13:35 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் தலைவர் டி. செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. சங்கத் துணைத் தலைவர் வீர மகேந்திரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் பூ.மகேஷ் ராஜன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள குப்பை கிடங்கை துரிதமாக அகற்ற நடவடி எடுக்க கோரியும், ஆறுமுகநேரியில் உள்ள வங்கிகளை அணுகி தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு கடன் பெற்று தருவது சம்பந்தமாகவும், ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் தினமும் ஏற்படும் நெரிசலையும் விபத்துகளையும் தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆன்லைன் வியாபாரத்தை எதிர்ப்பது சம்பந்தமாகவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சங்க பொருளாளர் எஸ் கணேசமூர்த்தி, சங்க நிர்வாகிகள் ராஜ், ஹனிபா, ராஜ சிங் வாழ்க தனசேகரன் முருகேசன் குமரகுரு உட்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வியாபாரிகள் சங்க உறுப்பினர் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்