வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

தச்சநல்லூரில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-02 21:19 GMT

தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்கத்தின் 47-வது பொதுக்குழு கூட்டம் தச்சநல்லூரில் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜார்ஜ் ஜோசப் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் குண்டும்-குழியுமாக மோசமாக உள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக விதிக்கப்பட்ட வரிகளை திரும்ப பெற வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். வியாபாரிகள், பயணிகள் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர்கள் அபூபக்கர், பாலசுப்பிரமணியன், இணைச்செயலாளர் ஆறுமுகம், உதவி செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் ரகுமத்துல்லா, செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், சிற்பி பாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்