வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

கடையத்தில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-30 19:58 GMT

கடையம்:

கடையத்தில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம், சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் கே.எஸ்.எம்.முருகேசன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் பிரம்மநாயகம், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சேக் முகமது வரவேற்று பேசினார். ஐதராபாத் பிஸ்கட் ஏஜென்சி வசந்தம் சித்திக், ஜி.ஜி. ஆட்டோ ஏஜென்சி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வணிகர் சங்க பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே. காளிதாசன், வணிகர் சங்க பேரமைப்பின் மண்டல தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நல்ல பல கருத்துகளை எடுத்து கூறினர். பாவூர்சத்திரம் வியாபாரிகள் சங்க பாலசுப்பிரமணியன், பாவூர்சத்திரம் தினசரி வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயண சிங்கம், கடையம் சங்க செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.முருகன், கென்னடி, மாடசாமி, குமரேசன், சுப்பிரமணியன், கணேஷ் சங்கர், மைதீன் பாவா, அப்துல் சலாம், முகமது மைதீன் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பழைய நிர்வாகிகளே தொடர்வது, புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் நிர்வாகிகளை கவுரவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்