வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்

மூலைக்கரைப்பட்டியில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-08-01 20:09 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வியாபாரிகள் தங்கள் கடைகளில் குப்பைத்தொட்டி வைத்து பயன்படுத்தப்படும் பொருட்களின் கழிவுகளை சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவிற்கு அழைத்து சென்று குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகள், மண்புழு உரமாக விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் அதை தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன், செயல் அலுவலர் லவ்லின் மேபா, வியாபாரிகள் சங்க தலைவர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்