வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
நெல்லையில் வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் டவுனில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். துணை தலைவர்கள் நாராயணன், முகமது அனிதா, கான்முகமது, சம்சுதீன், பொருளாளர் ஜவஹர், துணை செயலாளர்கள் செய்யது அலி, ஆதிமூலம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்டஸ் இன்ட் வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் 3 ஆண்டுகளாக நடந்து வரும் டவுன் போஸ் மார்க்கெட் பணிகளை விரைந்து முடித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். வணிக பயன்பாட்டிற்கு வினியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்தை அதிகப்படுத்தாமல் முன்பு இருந்ததைபோல் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அப்துல் ரகுமான்கனி, சாகுல்ஹமீது, ஹக்கிம், அய்யப்பன், அருள்தாஸ், லட்சுமணன், ராமசந்திரன், நாகூர்மீரான், முகமது அலி சித்திக், மாரியப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.