மோட்டார் சைக்கிள்கள் மோதல் வியாபாரி பலி
திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் வியாபாரி பலி
திண்டிவனம்
திண்டிவனத்தை அடுத்த நாகல்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 54). சவுக்கு வியாபாரம் செய்து வந்த இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஆவணிப்பூர் சென்று விட்டு மீண்டும் நாகல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாகல்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன்(30) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பச்சையப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.