பெரியகுளம் அருகே விபத்தில் வியாபாரி பலி

பெரியகுளம் அருகே விபத்தில் வியாபாரி பலியானார்.;

Update: 2023-07-21 21:45 GMT

திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 49). பழ வியாபாரி. இவர் கேரள மாநிலத்தில் பழம் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பழங்களை வாங்கிக்கொண்டு திருப்பூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியில் அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில், படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்