மின்சாரம் தாக்கி வியாபாரி சாவு
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கீரை வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 42). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் கீரை விற்பனை செய்வதற்காக தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டுக்கு வந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே கம்பியில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால், ஜெய்கணேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்நது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.