திருத்தணியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வியாபாரி சாவு
திருத்தணியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகர் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சின்னபையன் (வயது 68) என்பதும், இவர் திருத்தணி மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, கால் தவறி சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த சின்னபையனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.