கார் மோதி வியாபாரி சாவு

கார் மோதி வியாபாரி சாவு;

Update: 2023-05-31 19:15 GMT

நெகமம்

சூலூர் தாலுகா செஞ்சேரிமலையை அடுத்த மலையடிப்பாளையத்தை சேர்ந்தவர் அதிசயராஜ்(வயது 62). பழைய இரும்பு வியாபாரி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

தாசநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அதிசயராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்