கார் மோதி வியாபாரி சாவு

கார் மோதி வியாபாரி உயிரிழந்தார்.

Update: 2023-04-10 19:38 GMT

காரையூர்:

காரையூர் அருகே உள்ள வெள்ளைக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது 65). நெல் வியாபாரியான இவர் அரசமலை- காரையூர் சாலையில் அரசமலையில் இருந்து வெள்ளக்குடிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சங்கரன்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் கார் மோதியதில் கண்ணன் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்