வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆம்பூர் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஆம்பூரை அடுத்த சின்ன கொம்மேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்கிற ராஜசேகர் (வயது 35). இவர் மிளகாய் தூள் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.