வியாபாரி விஷம் தின்று தற்கொலை

கடலூர் துறைமுகம் அருகே வியாபாரி விஷம் தின்று தற்கொலை;

Update: 2023-05-02 18:45 GMT

கடலூர் முதுநகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் மகன் பிரபுதாஸ்(வயது 63). கடை வைத்து உர வியாபாரம் செய்து வந்த இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிரபுதாஸ் சம்பவத்தன்று கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனங்குப்பம் பகுதியில் எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபுதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்