தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி;

Update:2023-03-21 00:15 IST

நாகை ரெயில் நிலையம் முன்பு புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த கோரி எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஷேக் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாபு கான் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சாதிக் வரவேற்றார்.இதில் எஸ்.டி.பி.ஐ. நாகை மாவட்ட தலைவர் அக்பர், மாவட்ட செயலாளர்கள் கல்லார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டு. புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்